பிரித்தானியாவிலிருந்து துண்டிக்கப்பட இருக்கும் லண்டன்… முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் போரிஸ் ஜான்சன்

by Web Team
0 comment

பயங்கரமாக பரவும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவின் பிறபகுதிகளிலிருந்து லண்டனும் தென் கிழக்கு பகுதியும் துண்டிக்கப்பட உள்ளன.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புது வகை கொரோனா வைரஸ், ஏற்கனவே நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸைவிட 50 சதவிகிதம் வீரியமுடையது என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இந்நிலையில், அந்த பயங்கர வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகள் பிரித்தானியாவின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த புதுவகை வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இன்று அவர் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு ஒன்றை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கிழக்கு இங்கிலாந்திலிருந்தும் தென் கிழக்கு இங்கிலாந்துக்கும் பயணம் செய்வது கட்டுப்படுத்தப்படலாம் என்றும், லண்டனுக்கு மக்கள் பயணிப்பது தடை செய்யப்படலாம் என்றும் அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

VUI – 202012/01 என்று அழைக்கப்படும் அந்த புதிய கொரோனா வைரஸ் 1,000க்கும் மேற்பட்டவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேகமாக பரவும் இந்த புதிய வைரஸ், Kentஇலிருந்து உருவாகி லண்டனுக்கும் இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Related Posts

Leave a Comment