பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா காட்சிகள் எப்போது வரை வரும் தெரியுமா?- வெளிவந்த விவரம்

by Web Team
0 comment

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் முல்லை என்கிற சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

இன்று வரை அவரது இறப்பிற்கான சரியான காரணங்கள் வெளியாகவில்லை. அவர் ஏற்கெனவே சீரியலில் நடித்து முடித்த காட்சிகள் இப்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மக்களுக்கும் அவரை சீரியலில் பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாள் தான் அவரது காட்சிகள் என புலம்புகின்றனர்.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் வரும் டிசம்பர் 23ம் தேதி வரை தான் அவரது காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளதாம். அதன்பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் காவ்யா அந்த வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

Related Posts

Leave a Comment