சித்ராவின் கடைசி தருணம்.. சித்ராவின் கடைசி டிவி ஷோ.. வைரலாகும் வீடியோ காட்சி.. மிஸ்பண்ணிடாம பாருங்க..

by Web Team
0 comment

மறைந்த நடிகை சித்ரா கடைசியாக பங்கேற்ற ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சியின் வீடியோ வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் முல்லையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. இந்த தொடரின் மாபெரும் வெற்றிக்கு சித்ராவின் பங்கு மிகப்பெரியது என்றால் அது மிகையாகாது. இந்த தொடர் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சித்ராவின் கணவர் ஹேம்நாத் கொடுத்த மனஅழுத்தம்தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அன்று இரவு விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார்ட் ம்யூசிக் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் சித்ரா அன்று இரவு தற்கொலை செய்துகொண்டார். ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சிதான் சித்ரா கலந்துகொண்ட கடைசி டிவி நிகழ்ச்சி. இந்நிலையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், நடனம் என இறப்பதற்கு முன் ஜாலியாக இருந்த சித்ராவின் கடைசி தருணமான ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Related Posts

Leave a Comment