திருச்செந்தூரில் குளிக்கலாம்; மொட்டை அடிக்க கூடாது!

by Web Team
0 comment

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயில்கள் மீண்டும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்யவும், போதுமான பாதுக்காப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து தரவும் அரசு அறிவுறுத்தியது. அதேபோல் கோயில் கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது .

இந்நிலையில் 9 மாதங்களுக்குப் பின் திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மொட்டை அடிப்பது, காதுகுத்துதல் போன்றவற்றுக்கு தடை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவிலும் கூட பக்தர்களுக்கு அனுமதி மறுத்த கோயில் நிர்வாகம் பக்தர்களின்றி விழாவை நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment