உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஐரோப்பாவில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீண்டும் முழு முடக்கத்திற்குள் சென்றுள்ளன.
இந்நிலையில் தற்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் கொரோனா அறிகுறிகள் தெரிந்த மேக்ரோன் பரிசோதனை மேற்கொண்டு இருந்தார்.
அதன் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளன. அதன்படி மேக்ரோனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேக்ரோன் ஒரு வாரம் தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.