மறைந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம்பெண்ணின் புகைப்படங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பலருக்கும் பிடித்தமான கேரக்டர் அது என்பதால் ரசிகர்களும் அந்த சீரியல் குழுவினரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் மறைந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம் பெண் ஒருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தனா தினகர் என்ற பெயருடன் சமூக வலைதளத்தில் உள்ள அந்த பெண் முல்லை கேரக்டர் சித்ராவை போன்று போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
அதில் சித்ரா ஹேர் ஸ்டைலில் அவர் உடுத்தியிருக்கும் சேலை, அணிகலன்கள், பார்வை என அப்படியே அச்சு அசலாக அவரை போன்றே போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது சித்ராதானோ என்று யோசிக்கும் வகையில் உள்ளது.