தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

by Web Team
0 comment

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏரிகள் நிரம்பி வழிந்தன. அத்துடன் வெள்ளத்தினால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தார்கள். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு மேலாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நேற்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து, வங்கக்கடல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,கடலூர் ,மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Related Posts

Leave a Comment