அந்த நைட்டியில் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார்! பல உண்மைகளை உடைத்த இயக்குநர்

by Web Team
0 comment

நடிகை சித்ரா பற்றி கால்ஸ் பட இயக்குநர் சபரிஷ் பல வியடங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது,

ரித்விகாவை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க அவரை அணுகினோம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அவரை பார்த்த பிறகு ரித்விகா சரிபட்டு வர மாட்டார் என்று எனக்கு தோன்றியது.

அதன் பிறகு சித்ராவின் போராட்டங்கள், வேலையில் அவரின் அர்ப்பணிப்பு குறித்து கேள்விப்பட்டேன். அவர் ஒரு தமிழ் பெண். அதனால் கால் சென்டரில் வேலை செய்யும் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண் கதாபாத்திரத்திற்கு சித்ரா பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.

வேலையில் அவருக்கு ஏற்படும் பிரஷர் குறித்து தான் படம். கடுப்பில் பேசும் காலர்கள், டார்கெட், டீம் லீடரின் தொல்லை ஆகியவற்றை காண்பிக்கும் படம். வரிசையாக நடக்கும் கொலைகள், அதற்கும் சித்ராவுக்கும் என்ன தொடர்பு என்பதை படத்தில் காண்பித்துள்ளோம்.

நான் சித்ராவிடம் கதை சொன்னபோது பாதியிலே நிறுத்தி, இது போன்ற ஸ்க்ரிப்ட்டுக்காகத் தான் காத்திருந்தேன், செமயா இருக்கு, நான் நடிக்கிறேன் என்றார். மீதக் கதையை சொல்ல வேண்டாம், நான் பெரிய திரையில் மொத்த படத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்றார் சித்ரா.

சித்ராவின் பிறந்தநாளான மே 2ம் தேதி ட்ரெய்லரின் ரஃப் கட்டை அவருக்கு அனுப்பி வைத்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மொத்த படத்தையும் அவர் பார்க்கவில்லையே என்பது தான் என் வருத்தம்.

சித்ரா கால்ஸ் படத்திற்காக நாங்கள் வாங்கிய நைட்டியில் தான் தற்கொலை செய்து கொண்டார். படத்தின் ஓபனிங் காட்சியில் அவர் அந்த நைட்டியில் தான் வருவார். தஞ்சாவூரில் வாங்கிய நைட்டி.

மார்ச் மாதம் படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம், ஆனால் லாக்டவுனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை செப்டம்பர் மாதம் தான் துவங்க முடிந்தது. தியேட்டர்கள் திறந்த உடன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தோம் என்றார்.

இதனை கேட்டு ரசிகர்கள் மேலும் சேகத்தில் மூழ்கியுள்ளனர்.

Related Posts

Leave a Comment