ட்ரம்ப் கதை முடிந்தது.. ஜோ பைடனை வாழ்த்திய புதின்.!

by Web Team
0 comment

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. நேற்று நடைபெற்ற எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அடுத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.

மாறாக ’தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது, நான் தான் வெற்றி பெற்றேன்’ எனத் தொடர்ந்து கூறி வந்தார்.

ட்ரம்ப் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. ஜோ பைடன் அடுத்த மாதம் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க தேவையான பணிகள் தொடங்கிவிட்டன.

ஜோ பைடனின் வெற்றியை அனைத்து நாடுகளும் அங்கீகரித்துவிட்ட நிலையில் சீனாவு ரஷ்யாவும் மௌனம் காத்துவந்தன.

சில வாரங்களுக்குப் பிறகு சீனா ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து வாழ்த்து தெரிவித்திருந்தது. தற்போது ரஷ்ய அதிபர் புதினும் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இணைந்து பணியாற்றுவதற்கான இசைவையும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment