இயக்குனர் அவதாரம் எடுத்த டிடி… டைட்டிலை பார்த்து தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..

by Web Team
0 comment

பலருக்கும் ஃபேவரைட் ஆங்கராக இருப்பவர் தொகுப்பாளினி டிடி.. 90ஸ் கிட்ச்கள், ‘எனக்கு உங்கள சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்னு’ சொல்லுற அளவுக்கு பல காலமாக ஆங்கரிங்கில் கலகட்டி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் 1’, ’சூப்பர் சிங்கர்’, ’ஹோம் ஸ்வீட் ஹோம்’, ’காபி வித் டிடி’, ’எங்கிட்ட மோதாதே ’ , விருது வழங்கும் விழா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ஆகிவிட்டார்.

கலகலப்பான பேச்சின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் வலம்வரும் டிடி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுவரை தொகுப்பாளரும், நடிகையுமாக இருந்து வந்த டிடி தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

அவர் புதிதாக,’முக்காதே பெண்ணே’ என்ற பாடலை இயக்கியுள்ளார். தனது சொந்த தயாரிப்பில் அதனை உருவாக்கியிருக்கிறார். இதற்கு கோபி சுந்தர் என்பவர் இசையமைத்துள்ளார். அந்த பாடலின் போஸ்டரை டிடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். டைட்டிலை பார்த்த ரசிகர்கள் என்ன டைட்டில்டா இது? என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment