6 நாட்கள் விசாரணைக்கு பின் தற்கொலை செய்த சித்ராவின் கணவர் அதிரடி கைது.. வெளியான பரபரப்பு தகவல்

by Web Team
0 comment

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகினர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியுள்ளாக்கியது.

இவரின், தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை நடந்த நிலையில், பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

இதனையடுத்து, சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரிடம் 6 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் தாய் விஜயா ஆகியோர் அளித்த அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், ஏற்கனவே ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடமும் போலீசார் விசாரணை செய்தனர்.

இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணையை நடத்தினார்.

இந்நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக சித்ரா கணவர் கைது ஹேம்நாத் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் தீவிர விசாரணையும் நடைப்பெற்று வருகிறது.

Related Posts

Leave a Comment