இன்று சர்வ அமாவாசை விரதம்

by Web Team
0 comment

பசுவிற்கு கீரை,பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை தானம் செய்வது சிறந்த பலனை தரும் கோ பூஜை (பசு பூஜை ) சிறப்பு வெள்ளி,க்கிழமை அமாவாசை ஆகிய நாட்களில் வழிபட்டாலும் சுகமான வாழ்வு கிட்டும்; முன்னோர்களின் ஆசியும் கிட்டும். மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடும்போது, ஒரு கைப்பிடி பசும்புல் அல்லது வாழைப்பழம் அதற்குக் கொடுக்கவேண்டும்.

பசுவின் உடலில் சகல தெய்வங்களும் உறைவதால் ஆண்டுக்கு ஒருமுறையாவது கோ பூஜை செய்ய வேண்டும். பால், தயிர், நெய், போன்றவற்றை ஆண்டு முழுவதும் தருகின்ற பசுவிற்கு மரியாதை செய்து பூஜித்து பொங்கல் வைத்து அன்னமிட வேண்டும்.
பகவானால் படைக்கப்பட்டுள்ள விலங்குகளில் பசுக்களும் அடங்கும். பசுமாடு என்றால், பால் கொடுக்கும் ஒரு விலங்கு என்று நினைக்கிறோம்; ஆனால், அது ஒரு தெய்வீக விலங்கு. மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகிறது. இந்த பசுக்கள் எப்படி தோன்றியது என்பதும் புராணத்தில் உள்ளது.

ஆதிகாலத்தில், கடும் தவம் செய்து சுரபி என்னும் கோவையும், அதோடு கூட ஒரு ஆச்சரியமான புருஷனையும் உண்டு பண்ணினார் பிரம்ம தேவர். இவர்களின் வழி வந்தவை தான் பசுக்கள். இவர்களால் பசுக் கூட்டம் உண்டாயிற்று.

பசுவை பூஜிப்பவன், போஷிப்பவன் எல்லாருமே சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணிய லோகத்தை அடைவர் என்று பிரம்மதேவர் வரம் அருளினாராம்.

பசுக்களின் தேகமெல்லாம் தேவர்கள் நிறைந்திருக்கின்றனர்.

பசுவின் தலை – சிவபெருமான்நெற்றி – சிவசக்திவலது கொம்பு – கங்கைஇடது கொம்பு – யமுனைகொம்பின் நுனி – காவிரி, கோதாவரிமுதலிய புண்ணிய நதிகளும்,கொம்பின் அடியில் – பிரம்மாமூக்கின் நுனி – முருகன்மூக்கின் உள்ளே – வித்யாதர்கள்இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்இரு கண்கள் – சூரியன், சந்திரன்வாய் – சர்பசுரர்கள் (சந்திர பகவான் என்றும் கூறுவார்கள்)பற்கள் – வாயுதேவன்நாக்கு – வருணதேவன்நெஞ்சு மத்திய பாகம் – கலை மகள்கழுத்து – இந்திரன்மனித்தலம் – இயமனும், இயக்கங்களும்உதடு – உதயாத்தமன சந்தி தேவதைகள்முரிப்பு (கொண்டை) – பன்னிரு ஆதித்தியர்கள் (சூரியர்கள்) மற்றும் ருத்ரன்மார்பு – சாத்திய தேவர்கள்வயிறு – பூமி தேவிகால்கள் – அனிலன் என்னும் வாயு தேவன்முழந்தாள் – மருத்து தேவர்குளம்பு – தேவர்கள்குளம்பின் நுனி – நாகர்கள்குளம்பின் நடுவில் – கந்தவர்கள்குளம்பின் மேல்பகுதி – அரம்பையர்முதுகு – உருத்திரர்யோனி – சந்தமாதர்(ஏழு மாதர்)குதம் – இலட்சுமிமுன் கால் – பிரம்மாபின் கால் – உருத்திரன், தன் பரிவாரங்களுடன்பால் மடி (முலை) – ஏழு சமுத்திரங்கள் (சரஸ்வதி என்றும் கூறுவர்)சந்திகள் தோறும் – அஷ்டவசுக்கள்அரைப் பரப்பில் – பிதிர் தேவதைவால் முடி – ஆத்திகன்உரோமம் – மகா முனிவர்கள்எல்லா அங்கங்கள் – கற்புடைய மங்கையர்மூத்திரம் – ஆகாய கங்கை (லட்சுமி என்றும் கூறுவார்கள்)சாணம் – யமுனைசடதாக்கினி – காருக பத்தியம்இதயம் – ஆகவணியம் (எமன் என்றும் கூறுவார்கள்)முகம் – தட்சரைக்கினியம்எலும்பு, சுக்கிலம் – யாகத்தொழில் முழுவதும்எல்லா துவாரங்கள் – வாயுகால்கள் – சப்த மருத்துக்கன்வயிறு -அக்னிமலத்தில்-கீர்த்தியும், கங்கையும்மல ஜலம் கழிக்கும் இடம் – லட்சுமிவால் – தர்ம தேவதைபூட்டுக்கள் – சித்தர்கள்பசுவின் அசைவில்- காரிய சித்தியும், தவமும், சக்தியும்இப்படி, பசுவின் தேகத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கின்றனர்.

உலகிற்கு சிறந்த புண்ணியமும், ஹோமத் திரவியமும் கொடுக்கிறது.

Related Posts

Leave a Comment