ஜடேஜா சாதனையில் இணைந்தார் இர்பான் பதான்

by Lifestyle Editor
0 comment

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது நடைபெற்று வரும் லங்கா பிரிமீயர் லீக்கில் கண்டி டஸ்கர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கெதிராக 19 பந்தில் 25 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் டி20-யில் 2000 ரன்கள் அடித்ததுடன் 150 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியாவைச் சேர்ந்த ஜடேஜா இதற்கு முன் 2000 ரன்கள் அடித்ததுடன், 150 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஜடேஜா 220 போட்டிகளில் இந்த சாதனையை எட்டினார். இர்பான் பதான் 180 போட்டிகளில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

Related Posts

Leave a Comment