படுக்கையறையில் பிணமாக கிடந்த பிரபல நடிகை! தற்கொலை?

by Lifestyle Editor
0 comment

சினிமா வட்டாரத்தில் தற்கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன. இது பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமா விட்டார துறையில் நடிகை சித்ரா அண்மையில் தற்கொலை செய்துகொண்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் நாடு முழுக்க இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா, சீரியல் பிரபலங்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியது.

இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் முக்கிய நடிகை ஆர்யா பானர்ஜி நேற்று முன் தினம் மேற்கு வங்காளத்தில் தான் வசித்து வரும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அன்றைய தினம் வழக்கம் போல வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண் நீண்ட நேரமாக வீட்டின் காலிங் பெல் அடித்தும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினரை விசாரித்துள்ளார். இதனால் சந்தேகித்த நபர்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்து, பின் கதவை உடைத்து பார்த்த போது இறந்து கிடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த ஆர்யா லவ் செக்ஸ் அவுர் தோஹா மற்றும் சில படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் மறைந்த சிதார் கலைஞர் நிகில் பந்தோபாத்யாயாவின் மகள் ஆவார்.

Related Posts

Leave a Comment