நாளை முதல் மெரினாவில் அனுமதி!

by Lifestyle Editor
0 comment

கொரோனா பரவல் தளர்வுகளின் படி மெரினா கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

கொரோனா காரணமாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு செல்ல அரசு தடை விதித்தது. அதன்படி தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகளில் மக்கள் கூடுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய குறைய தளர்வுகளுடன் அளிக்கப்பட்டு தியேட்டர்கள், பூங்காக்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் கடற்கரைக்கு செல்ல தடையானது தொடந்து வண்ணம் இருந்தது. இதனால் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வரும் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் நாளை முதல் மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் கடற்கரை மணற்பரப்பு, சர்வீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment