மணமேடையில் மனைவியுடன் கிரிக்கெட் விளையாண்ட வருண் சக்கரவர்த்தி!

by Lifestyle Editor
0 comment

இந்திய கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலிய அணியில் முதலில் பெயர் அறிவிக்கப்பட்டவர் வருண் சக்கரவர்த்திதான். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் ஆடும்போது காயப்பட்டால்தான் பாலாஜிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணியின் மிக முக்கியமான பவுலர். இம்முறை கொல்கத்தா பல போட்டிகளில் வெல்ல வருண் சக்கரவர்த்தி காரணமாக இருந்தார்.

வருண்சக்கரத்தி பல ஆண்டுகளாக காதலித்த பெண் நேஹா. இரு வீட்டாரின் சம்மத்தத்தோடு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனால், கொரோனா லாக்டெளன் காரணத்தால் திருமண தேதி தள்ளிப்போனது. அதன்பின் ஐபிஎல் போட்டிகள் அறிவித்ததும் இன்னும் தள்ளிப்போனது. ஆஸ்திரேலியாவுக்கு வருண் பெயர் அறிவிக்கப்பட்டதும், அநேகமாக அடுத்த ஆண்டுதான் திருமணம் என்றிருந்த நிலையில் வருண் செல்வது தடைபடவே, உடனே திருமணம் செய்யப்பட்டது.

நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. குறிப்பிட்ட நெருங்கிய நண்பர்கள் முன்னிலை நடந்த திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திருமண மேடையில் வருண் பந்து வீச, நேஹா பேட்டிங் ஆட கலகலப்பானது கல்யாணக்கூடம்.

Related Posts

Leave a Comment