சென்னையில் திருட வந்த வீட்டில் போதையில் மயங்கிய திருடன்..

by Lifestyle Editor
0 comment

சென்னை: திருடச் சென்ற போது போதையில் மயங்கி கிடந்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்வம் சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் 23வது தெருவில் வசிப்பவர் சேகர் (வயது , இவரது மனைவி ஆனந்தி (வயது 55). கோவைச் சேர்ந்த இந்த தம்பதி ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்கள்

நேற்று சமையல் வேலைக்கு சென்றுவிட்டு கணவன் மனைவி இருவரும் மாலை வீடு திரும்பினர். அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு கடப்பாரையுடன் ஒருவர் போதையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அத்துடன் அந்த தம்பதி கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போதையில் மயங்கி கிடந்தவரை தட்டி எழுப்பி தர்ம அடை கொடுத்தனர். இதுகுறித்து அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடிபோதை ஆசாமியை அழைத்துச் சென்றனர்,

அந்த நபர் யார் என்று விசாரித்த போது, ஆலந்தூர் வஉசி தெருவைச் சேர்ந்த நாகராஜ்(45) என்பதும் வீட்டில் போதையில் திருட வந்த போது மயங்கி விழுந்ததும், இவர் பழைய திருட்டு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை கைது செய்த போலீசார் தொடந்து விசாரித்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment