மாஸ்க்கா… பிளாஸ்டிக் கவசமா?

by Lifestyle Editor
0 comment

கொரோனா நோய் பரவல் உலகையே மிரட்டி வருகிறது. வந்த பின் சிகிச்சை எடுப்பதற்கு முன் வராமல் தடுப்பதே சிறந்தது என பலரும் பரிந்துரைக்கின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 85 லட்சத்து 68 ஆயிரத்து 681 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 74 லட்சத்து 62 ஆயிரத்து 805 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 63 ஆயிரத்து 133 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,95,42,743 பேர்.

இந்நிலையில் வெளியில் செல்லும்போதெல்லாம் மாஸ்க் அணிந்து செல்வதை மறக்காதீர்கள் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் இதைப் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை.

இன்னும் சில கடைகள் மற்றும் அலுவலங்களில் முகத்தை மறைக்கும் பிளாஸ்டிக் கவசத்தை மாட்டிக்கொள்கிறார்கள். அதனால் கொரோனா நோய்த் தொற்று தாக்கதிருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆனால், அது சரிதானா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இதுகுறித்த ஆய்வு ஒன்றின் முடிவில், ஒரு தும்மும்போது எச்சில் பரந்து விரியும். அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு பிளாஸ்டிக் கவசத்தை விட, துணியால் ஆன மாஸ்க்கே சிறந்தது என்று அம்முடிவு தெரிவித்திருக்கிறது.

எனவே, மாஸ்க் அணிவதை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம் என்பதே இவ்வாய்வு சொல்லும் தீர்வு.

Related Posts

Leave a Comment