ஏழு வயது மகளின் நிலை கண்டு நிலை குலைந்த தந்தை

by Lifestyle Editor
0 comment

ஒரு கிராமத்தில் ஏழு வயது சிறுமியை இரண்டு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் ஒரு மைனர் சிறுமி சில மணி நேரம் காணாமல் போயிருந்தார்.அதனால் அவரது குடும்பத்தினர் அவளைத் தேடத் தொடங்கினர். அப்போது வெள்ளிக்கிழமை மாலை புதனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் ஒரு வீட்டின் கூரையில் அவர் மயக்கமடைந்து ரத்தக் கசிவு காணப்பட்டார் என்று அவர்கள் போலீசில் தெரிவித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேட தொடங்கினார்கள் .அப்போது குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினார்கள் .அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 டி (கும்பல் கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மைனரின் தந்தை போலீசில் கூறிய புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர் அவளை அருகிலுள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக” குற்றம் சாட்டினார். அவர்கள் அவளை மயக்க நிலையில் வீட்டின் கூரையில் விட்டுவிட்டார்கள் என்று அவர் கூறினார். குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என சிறுமியின் தந்தை கூறினார்.

Related Posts

Leave a Comment