தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு பி.எச்.டி படித்த பேராசிரியர் போதை பொருளை வீட்டிலேயே தயாரித்துள்ளார் .அவரின் இரகசிய ஆய்வகத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) கண்டுபிடித்தது . சட்டவிரோதமாக போதைப்பொருளை தயாரித்ததற்காக வேதியியல் ஆராய்ச்சி அறிஞரை போலீசார் கைது செய்தனர்
ஹைதராபாத்தை சேர்ந்த வேதியியலில் பி.எச்.டி பட்டம் பெற்ற 45 வயதான சீனிவாச ராவ், மும்பையைச் சேர்ந்த போதைப்பொருள் கூட்டத்துடன் இனைந்து பணிபுரிந்து வருவதாக போலீசார் கண்டறிந்தனர் .அவர் ஏற்கனவே 100 கிலோ மருந்துகளை அவர்களுக்கு வழங்கியதாகவும் அந்த நிறுவனம் கூறியது. இதனால் அவரையும் மும்பையைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் கூட்டாளியையும் டி.ஆர்.ஐ கைது செய்தது.அவரின் ஆய்வகத்தில் நடந்த சோதனையின் போது ரூ .63.12 லட்சம் மதிப்புள்ள 3.156 கிலோ மெபெட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவரின் வீட்டில் தேடியதில் ரூ. 12.40 லட்சம் ரொக்கமும், 112 கிராம் மெபெட்ரோன் மாதிரிகள் (வெவ்வேறு தூய்மையும்) பறிமுதல் செய்யப்பட்டன.
“மேற்கூறியவற்றை தவிர, மெபெட்ரோனை உற்பத்தி செய்வதற்கான 219.5 கிலோ மூல மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ரகசிய ஆய்வகத்தில் மேலும் 15-20 கிலோ மெபெட்ரோனை உற்பத்தி செய்ய இது போதுமானது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஒரு வருடத்தில் 100 கிலோவுக்கு மேற்பட்ட மெபெட்ரோனை தயாரித்து விற்பனை செய்துள்ளார்.
மெபெட்ரோன் என்பது ஒரு செயற்கை தூண்டுதல் மருந்து ஆகும், இது பொதுவாக பொழுதுபோக்குக்காக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது .மேலும் நகர்ப்புற கல்லூரி மாணவரிடையே பிரபலமாக உள்ளது. இது பேச்சுவழக்கில் டிரோன், மியாவ் மியாவ் என அழைக்கப்படுகிறது, ..