வீரராகவ பொருமாள் கோயில் அமாவாசை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து

by Lifestyle Editor
0 comment

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில், அமாவாசை தினத்தன்று, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவள்ளூரில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை தினத்தன்று, திருவள்ளூர் மட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவது வழக்கம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அமாவாசை தினத்தன்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை கார்த்திகை அமாவாசை என்பதால், பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக 10-வது மாதமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனையொட்டி, இன்று பகல் 12 மணி முதல் நாளை இரவு வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று வரும் 25ஆம் தேதி நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Posts

Leave a Comment