கால்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக். நடித்த சித்ரா இல்லையே.. படக்குழுவினர் கண்ணீர்

by Lifestyle Editor
0 comment

சென்னை: கால்ஸ் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ள நிலையில் அதில் கதாநாயகியாக நடித்த சித்ரா உயிருடன் இல்லாதது படக்குழுவினரை வேதனை அடையச் செய்துள்ளது. தனது துருதுரு நடிப்பால் ரசிகர் பட்டாளத்தால் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் நடிகை விஜே சித்ரா.

இவர் கடந்த வாரம் ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தற்கொலை என பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து அதற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் அவரது கணவர் ஹேம்நாத், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காமெடி

நிகழ்ச்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை, மாடல், காமெடி குயின் என பல்வேறு திறமைகளில் கொடிக் கட்டி பறந்த சின்னத்திரை சித்ராவின் திறமையை வெள்ளித்திரையும் தற்போது பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஆம், சித்ரா கதாநாயகியாக நடித்த கால்ஸ் என்ற படத்தின் டீசர் இன்று காலை வெளியாகிறது.

முழுவீச்சில்

Infinite pictures தயாரிப்பில் கால்ஸ் திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு நடிகர் டெல்லி கணேஷ், பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர், திருச்சி, சென்னை மற்றும் காசி என பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு

இதில் விஜே சித்ரா கதாநாயகியாக நடிக்க, டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்சினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சிரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஜெ.சபரீஸ் இயக்கியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட திரையரங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு கால்ஸ் திரைப்படத்தின் First look வெளியிடப்பட இருக்கிறது.

ரசிகர்கள்

நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகை என சிரித்த முகத்துடன் பரம்பரமாக சுழன்று பணியாற்றிக்கொண்டிருந்த சித்ரா, அவர் நடித்த திரைப்படம் குறித்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் சூழலில் அவர் இல்லாதது படக்குழுவினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment