லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வரும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 2021 ல் வெளியாகவுள்ளது. விஜய் கல்லூரி பேராசிரியராக இதில் நடித்துள்ளார்.
கொரோனாவால் தீபாவளிக்கு திட்டமிட்ட படி படம் வெளியாக முடியாத சூழ்நிலையான போதிலும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது ரசிகர்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியே..
அந்த டீசரும் மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளி பெரியளவில் சாதனை படைத்தது. இப்படம் ஓடிடியில் வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்த போது படம் தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு உறுதியளித்தது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மாஸ்டர் படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளது. இதன் படி படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் இருந்து 5 நாட்களுக்கு வேறு எந்த படங்களையும் திரையிடக்கூடாது என கூறியுள்ளது. இதனை தியேட்டர் அதிபர்களும் ஏற்றுள்ளனராம்.