இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது இவர் தான்!

by Lifestyle Editor
0 comment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 70 நாட்கள் ஆகின்றன. இதுவரை இந்த போட்டியிலிருந்து ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா மற்றும் ரமேஷ் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கமல் அறிவித்த நிலையில் ரமேஷ் நேற்று வெளியேறினார். இது அர்ச்சனா & கோ -க்கு மட்டுமல்லமொத்த ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும் அதிர்ச்சியை கொடுத்தது எனலாம்.

இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் கமல் ஹாசன், எவிக்ஷனில் உள்ள ஐவரும் ஒன்றாக அமருங்கள் என்று கூறி முதலில் வெளியேற்றும் நபரை அறிவிக்கலாமா? அல்லது காப்பாற்றப்பட்ட நபரை அறிவிக்கலாமா? என்று கேட்கிறார். பின்பு யாரை காப்பாற்றலாம் என்று ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் கேட்க ரியோ – பாலா இருவரும் ஷிவானி பெயரை கூறுகின்றனர். அனிதா நிஷா காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்ல, கேபி நிஷா வெளியேறலாம் என்று கூறும்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது. இந்த வாரம் ஏற்கனவே ரமேஷ் வெளியேறிய நிலையில் இன்று நிஷா வெளியேற உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Related Posts

Leave a Comment