ரூ. 1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோகிராம் மெபெட்ரான் (எம்.டி) வைத்திருந்த சயாத் என்ற பெண்ணை மும்பை போதைப்பொருள் தடுப்பு செல் (ஏ.என்.சி) கைது செய்துள்ளது. போலீசார் விரைவாக செயல்பட்டு, பாந்த்ரா பிரிவு டோங்ரி பகுதியைச் சேர்ந்த சனம் சயீத் (25) என்பவரை கைது செய்துள்ளது. அவரது கணவர் தாரிக் சயாத் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மும்பையின் டோங்ரியில் ஒரு பெண் போதைப் பொருள் வைத்துகொண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு வெள்ளியன்று தகவல் கிடைத்தது . பின்னர் போலீசார் டோங்ரிக்குச் சென்று, அந்தப் பெண்ணை வளைத்து பிடித்தனர் . அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையின் போது, அவரிடமிருந்து 60 கிராம் எம்.டி. போதை பொருளை பறிமுதல் செய்தனர் .பின்னர் அவரின் வீட்டிற்கு போலீசார் சென்றனர்.அங்கிருந்து மொத்தம் ரூ .1.10 கோடி மதிப்புள்ள போதை மருந்துகளை பறிமுதல் செய்தனர், மேலும் ரூ .8.78 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்தனர் .
போலீஸ் விசாரணையில் மும்பையில் வெவ்வேறு இடங்களில் சயாத் போதைப்பொருள் விற்பனை செய்கிறார் என்றும், அவரது கணவர் மொபைல் பழுதுபார்க்கும் கடையை நடத்தி கொண்டே , போதைப்பொருட்களையும் விற்கிறார் என்றும் தகவல் கிடைத்தது . “இந்த போதை வணிகத்தின் சூத்திரதாரி சயத்தின் கணவர் தாரிக் சயாத்தான் ,எனவே நாங்கள் அவரைத் தேடுகிறோம். இவ்வளவு பெரிய அளவிலான எம்.டி எங்கிருந்து வந்தது என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.மேலும் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று ஒரு அதிகாரி கூறினார்.