வயலில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

by Lifestyle Editor
0 comment

நியூயார்க்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கொலராடோ நகரிலிருந்து தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு விமானியும், ஒரு பயணியும் இருந்தனர்.இந்த ஹெலிகாப்டர் டெக்சாஸ் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து விமானி உடனடியாக ஹெலிகாப்டரை அங்குள்ள வயலில் அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சி பலன் அளிக்காததால் அந்த ஹெலிகாப்டர் வயலில் விழுந்து நொறுங்கியது.இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

Related Posts

Leave a Comment