சித்ராவை தொடர்ந்து பிரபல நடிகை மரணம்! படுக்கையறையில் சடலமாக கிடந்த பரிதாபம்

by Web Team
0 comment

நடிகை ஆர்யா பானர்ஜி தனது வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டர்டி பிக்சர்ஸ் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆர்யா பானர்ஜி. இவருக்கு டெப்டுட்டா என்ற பெயரும் உண்டு.

33 வயதான ஆர்யா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று வெகுநேரமாக வீட்டு வேலைக்கார பெண் ஆர்யா வீட்டு கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் அங்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே பார்த்த போது ஆர்யா அங்கு சடலமாக கிடந்தார்.

அவரின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

மேலும் ஆர்யா பானர்ஜியின் அறையில் இருந்து சில மருந்து சீட்டுகள் மற்றும் மது பாட்டில்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

ஆர்யாவின் மரணத்தை இயற்கைக்கு மாறானது என வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்யாவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment