‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் நடிகை சித்ராவுக்கு அஞ்சலி : கதறி அழுத குமரன்

by Web Team
0 comment

மறைந்த நடிகை சித்ராவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது.

வரும் பிப்ரவரி மாதம் தொழிலதிபர் ஹேமந்த் ரவியுடன் திருமணம் செய்து கொள்ள இருந்த சித்ரா பெற்றோர் சம்மதத்துடன் இவரை பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திருமணமாகி 2 மாதத்தில் சித்ரா இறந்திருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாண்டியன் படப்பிடிப்பில் நடிகை சித்ராவுக்கு படக்குழுவினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதில் நடிகர்கள் ஸ்டாலின், குமரன், சரவணன், ஹேமா, சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் குமரன், ஸ்டாலின் ஆகியோர் கதறி அழுத முகத்துடன் உள்ளது தெரிகிறது. முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடந்து வந்த சித்ரா இல்லாமல் படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment