தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் அறிக்கைக் குழு, பிரச்சாரம் என அதிரடியாக களமிறங்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி கடலூர், நாகை உள்ளிட்ட இடங்களை புரட்டி போட்ட புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார். கடலூரில் வெள்ள நீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், அப்பகுதி மக்களுக்கு நிவாரணமும் வழங்கி வந்தார்.
இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது அவருக்கு தலைசுற்றல் மற்றும் மயக்கம் வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.