பிரபல ரிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் மிகவும் தைரியமாகவும், மகிழ்ச்சியாகவே இருந்தவர் இப்படியொரு முடிவினை எடுத்துள்ள இவரின் சில காணொளி மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் பதிவிட்டு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.