சாவுக்கு பின்னால மர்மம் இருக்கு! மன வேதனையுடன் கண்ணீர் விட்டு அழுத பிரபல காமெடி நடிகர்!

by Web Team
0 comment

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நாடக ரசிகர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணாக, மருமகளாக, மகளாக, சகோதரியாக பார்க்கப்பட்ட சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, நசரத்பேட்டையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் இன்று காலை முகத்தில் காயங்களுடன் தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சினிமா, சின்னத்திரை வட்டாரத்தினர் பலரும் அவரின் இந்த தற்கொலை முடிவால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கண்ணீருடன் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகரும், இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோபாலா மனசுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. சித்ரா சின்னத்திரையில் தைரியமான பெண், அப்பெண் இப்படி ஒரு முடிவெடுக்க வாய்ப்பே இல்லை, ஒவ்வொரு சாவுக்கு பின்னாலும் ஒரு மர்மம் இருக்கிறது, அது போல இப்பெண்ணின் சாவிற்கு பின்னாலும் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என கூறி கண்கலங்கி பேட்டியளித்துள்ளார்.

Related Posts

Leave a Comment