பிரபல ரிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ரா ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல ரிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா(29).
இவர் இன்று 09.12.20-ம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார்.
தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆனால் சித்ரா ஹேமந்த்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாக்வும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சித்ராவின் கன்னத்தில் காயம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அவர் இறந்த பின்பு கட்டிலில் அவரது உடல் கிடக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.