வருங்கால கணவருடன் சண்டை: குளிக்கச் சென்ற சித்ரா தூக்கில் தொங்கிய சோகம்

by Web Team
0 comment

பிரபல சீரியல் நடிகை சித்ரா நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2013ம் ஆண்டு தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் சித்ரா. அதன் பிறகு சரவணன் மீனாட்சி உள்பட பல சீரியல் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். ஃ

தொலைக்காட்சியில் உருவாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு இவர் திரும்பியுள்ளார்.

அவருடன் இவரது வருங்கால கணவர் ஹேமந்த் என்பவரும் இருந்தார், அந்த சமயத்தில் இருவருக்கும் சிறிது நேரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் சித்ரா அவர்கள் ஹேமந்திடம், தான் குளிக்க செல்கிறேன், அதுவரை வெளியே இருங்கள் என கூறியுள்ளார், அப்போது அதிகாலை 3 மணியளவில் இருக்கும்.

அதன்படி ஹேமந்தும் வெளியே சென்று காத்திருந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால். சந்தேகித்த ஹேமந்த் ஹோட்டல் ஊழியருடன் சேர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து நசரத் பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சித்ராவின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, சித்ரா- ஹேமந்த் வாக்குவாதத்திற்கு பிறகே தற்கொலை முடிவை எடுத்துள்ளதால், ஹேமந்திடம் போலீசார் தற்போது ஹேமந்த்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தனது பிரச்சனை குறித்து சித்ரா யாருக்காவது தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாரா எனவும் விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும் பிரேத பரிசோதனையின் முடிவிலே அனைத்திற்கும் விடை தெரியவரும் என கூறப்படுகிறது.

 

Related Posts

Leave a Comment