ஒரே ஒரு கிட்னி தான்… மந்தமான கால்கள்… உலக தடகள போட்டியில் சாதித்து காட்டிய அஞ்சு ஜார்ஜ்

by Web Team
0 comment

2003-ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தவர் பிரபல தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும் அவர் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

தற்போது கேரளாவில் வசித்து வரும் அஞ்சு பாபி ஜார்ஜ் தனது ட்விட்டர் பதிவில், தன்னுடைய வெற்றியின் குறித்து வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

அவர் வெளியிட்ட ட்விட் பதிவில், பலரால் இதை நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், நான் மிக அதிர்ஷ்டசாலி. ஒரே ஒரு கிட்னி, வலி நிவாரணிக்கு கூட ஒவ்வாமை, மந்தமான கால்கள். இப்படி பல தடைகள் என் முன் இருந்தன.

ஆனாலும் என்னால் உலக தர வரிசையில் உச்சியை எட்ட முடிந்தது. இதை என் பயிற்சியாளரின் மாயமென்று சொல்வதா அல்லது திறமை என்று சொல்வதா” என்று அஞ்சு பதிவிட்டிருக்கிறார்.

அவரது ட்வீட்டுக்கு பதிலளித்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரென் ரிஜிஜு (Kiren Rijiju), அஞ்சு தனது கடின உழைப்பு, திடம் மற்றும் உறுதியின் மூலம் இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்த்திருக்கிறார் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment