இந்திய கிரிக்கெட் அணியை குறைத்து மதிப்பிட்ட வாகனுக்கு பதிலடி கொடுத்த வாசிம் ஜாபர்

by Web Team
0 comment

இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன், இந்தியா மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் தோல்வியை சந்திக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார்.

இந்தியா முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒருநாள் தொடரை இழந்தது. அப்போது மைக்கேல் வாகனின் கணிப்பு சரியாக இருக்குமோ? எனத் தோன்றியது.

அதன்பின் சுதாரித்துக்கொண்ட இந்திய அணி அபாரமாக விளையாடியது. கடைசி ஒருநாள் போட்டியை வென்றதுடன், முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இதனால் வாகனின் கணிப்பு தவறானது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சி டிராயில் சாதனைப் படைத்தவருமான வாசிம் ஜாபர் ஒரு படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தார்.

Related Posts

Leave a Comment