அமெரிக்காவில் கொரோனா பலி 5,00,000 ஆகக்கூடும் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

by Web Team
0 comment

கொரோனா பாதிப்பிலிருந்து பெரும்பாலான உலக நாடுகள் மீண்டு வருகிற நிலையில் பல இடங்களில் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது.

கொரோனாவுக்கு அனைவரும் பழகிவிட்ட நிலையில் அதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவன் ஆடி வருகிறது.

கடந்த சில தினங்களாக அமெரிக்காவில் நாள்தோறும் 2,00,000க்கும் அதிகமான பாதிப்புகளும் 2,500க்கும் அதிகமான மரணங்களும் பதிவாகி வருகின்றன.

பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை கோடியை கடந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 2,90,000 நெருங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை விரைவில் வழங்கும் முனைப்பில் அமெரிக்க அரசு ஈடுபட்டு வருகிறது.

ஆனால் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்தாலும் பலி எண்ணிக்கையை பெரும் அளவில் குறைக்க முடியாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வில் ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா பலி ஐந்து லட்சத்தை தொடும் என்றும் தடுப்பு மருந்து வந்தாலும் 9000 மரணங்களை மட்டுமே தடுக்கமுடியும் என்று தெரிவித்துள்ளது.

மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்கினால் 66,000 உயிர்கள் வரை காப்பாற்ற முடியும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment