விசாரணை கைதி உயிரிழப்பு

by Lifestyle Editor
0 comment

கோவை

கோவை மத்திய சிறையில் திருட்டு வழக்கில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவர் மீது காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் ரவியை கைதுசெய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சிறையில் இருந்த ரவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்றனர். அங்கு ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

Related Posts

Leave a Comment