ராசா ஒண்ணும் நிரபராதி கிடையாது; விடுதலையும் ஆகவில்லை…

by Lifestyle Editor
0 comment

2ஜி ஊழல் வழக்கு பொய்யானது. அதில் குற்றம் நிரூப்பக்கப்படவில்லை. குற்றம் நிரூப்பிக்கப்பட்டு ஜெயலலிதாதான் உள்ளே சென்றார் என்றும், முதல்வரை ஒருமையில் பேசி, சொடக்கு போட்ட ஆ.ராசா ஒன்று நிரபராதி இல்லை என்றும், இன்னமும் அவர் விடுதலை ஆகவில்லை என்றும் தெரிவித்தார் முதல்வர்.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வுகூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த செய்தியாளர்கள், 2ஜி ஊழல் விவகாரத்தில் கோட்டையில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று சொடக்கு போட்டு அழைத்திருக்கிறாரே திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா என்ற கேள்வியை எழுப்பினர்.

அதற்கு, ‘’காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. அந்த காங்கிரஸ் ஆட்சி செய்துகொண்டிருக்கும் போதே ஸ்பெக்ட்ரம் 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராசா சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ உரிய நேரத்தில் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால்தான், ராசாவை விடுவித்திருக்கிறார்கள்.

அப்போதும் கூட ராசாவை நிரபராதி என்று அறிவிக்கவில்லை. விடுதலையும் செய்யவில்லை. வழக்கு இன்னமும் நீருபிக்கப்படாததால்தான் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால்தான் அதற்குள் முழுவதுமாக போகாமல் மேலோட்டமாக சொல்லி இருக்கிறேன்’’என்றார்.

அவர் மேலும், ‘’வழக்கு முடிந்தால் அவர் எங்கு இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ராசா மீது குற்றம்சாட்டி அவரை சிறையில் அடைத்திருந்தால் 2ஜி ஊழல் வழக்கு பொய்யானது என்று சொல்லலாம். அவர் அங்கம் வகித்த அரசாங்கமே குற்றவாளி என்று ராசாவை சிறையில் அடைத்தது. 2ஜி ஊழல் வழக்கு என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?’’என்று கேட்டவர்,

‘’2ஜி ஊழல் கொஞ்ச நஞ்சமல்ல.. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்.2ஜி அலைக்கற்றையில் மட்டும் கொள்ளையடித்திருக்கிறார்கள். இது வெட்டவெளிச்சமாக தெரிகிறது’’ என்றார் முதல்வர்.

Related Posts

Leave a Comment