அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

by Lifestyle Editor
0 comment

மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போது திமுக எந்த திட்டங்களை கொண்டு வந்தது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. ஆளும் கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினர் அறிக்கை வாயிலாக பதிலளித்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து, அதிமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதற்கு முதல்வர் ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பின் போதும், பதிலடி கொடுத்து வருகிறார். இப்படியிருக்கும் சூழலில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை போல திமுகவினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா மற்றும் புயல் காலக்கட்டத்தில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் யாரும் வெளியே வரவில்லை என காட்டமாக தெரிவித்தார். மேலும், மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போது தமிழகத்திற்கு திமுக என திட்டங்களை கொண்டு வந்தது? என கேள்வி எழுப்பிய அமைச்சர், மத்திய அரசிடமிருந்து எத்தனை கோடி நிதி பெற்றுள்ளது என திமுகவுக்கு எதிராக கேள்விகளை முன்வைத்தார்.

Related Posts

Leave a Comment