கொரோனா பாதிப்பில் இருந்து அமீரகம் வேகமாக மீண்டு வருகிறது

by Lifestyle Editor
0 comment

துபாய்:

அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உலகில் கொரோனா பாதிப்பு பல்வேறு பொருளாதார, சமூக மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் வேகமாக மீண்டு வரும் நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அமீரகத்தின் 50-வது பொன் விழா ஆண்டு அடுத்த ஆண்டு கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பல்வேறு மெகா திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

இந்த புதிய திட்டப்பணிகள் மூலம் இந்த பிராந்தியத்திலும், உலகிலும் ஒரு முன்னணி நாடாக அமீரகம் திகழும். துபாய் உலக வர்த்தக மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை ஜிடெக்ஸ் தொழில்நுட்ப கண்காட்சி நடக்கிறது. இந்த ஆண்டில் மிகவும் முக்கியமான உலகளாவிய தொழில்நுட்ப கண்காட்சியாக திகழும்.

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தங்களது திறமையை சிறப்பாக நிரூபித்து வருகின்றன. சிறப்பான தொழில்நுட்ப கண்காட்சி மூலம் அடுத்த ஆண்டும் இன்னும் பல்வேறு திட்டங்களுடனும், புதிய முயற்சிகளுடனும் செயல்படுவோம். இந்த 40-வது ஜிடெக்ஸ் தொழில்நுட்ப கண்காட்சியில் அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,200 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

மேலும் இந்த கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம், ஸ்மார்ட் நகரங்கள், எதிர்கால கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 350 க்கும் மேற்பட்ட சொற்பொழிவாளர்கள் பேசுகிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக கண்காட்சி சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது.

இவ்வாறு துணை அதிபர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment