கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – அபுதாபி

by Lifestyle Editor
0 comment

அபுதாபி:

அபுதாபி சுகாதார சேவைகள் துறை டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அபுதாபி பகுதியில் கொரோனா பாதிப்பு குறித்த அறிகுறி இருப்பவர்கள், வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், வெளிநாடுகளில் இருந்து அபுதாபிக்கு வருபவர்கள் என பலரும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்வதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவ நிலையங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அபுதாபி சுகாதார சேவை துறையின் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்காக 370 திர்ஹாம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் 250 திர்ஹாம் கட்டணமாக குறைக்கப்பட்டது. தற்போது பரிசோதனை கட்டணமானது 85 திர்ஹாம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்த கட்டண குறைப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண குறைப்புக்கு பொதுமக்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். துபாய் சுகாதார ஆணையம் கொரோனா பரிசோதனைக்கு 150 திர்ஹாம் கட்டணம் வசூலித்து வருகிறது. சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட இடங்களில் முன்பதிவு செய்து இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யும் வசதியும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment