சென்னையில் நிவர் புயல் மத்திய குழு ஆய்வு

by Lifestyle Editor
0 comment

சென்னை: நிவர் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த தமிழகம் வந்துள்ள மத்திய குழு இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தது. நிவர் புயல் பாதித்த பகுதகளை ஆய்வு செய்ய நேற்று மத்திய குழு தமிழகத்திற்கு வந்தது.

தலைமை செயலாளருடன் மத்திய ழுழு நீண்ட நேரம் ஆலோசனை செய்தது. நிவர் புயலால் எவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்ரிக்கை மற்றும் நிவாரண பணிகள் குறீத்து கேட்டறிந்தனர். தலைமை செயலாளர், சேதமதிப்பு குறித்த அறிக்கையை அளித்தார்.

மத்திய குழுவினர் சென்னை, கடலூர், விழுப்புரம் உள்பட 8 மாவட்டங்களை இன்றும் நாளையும் நேரில் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறது. இன்று தென்சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, வேலூரில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறது.

இன்று காலை வேளச்சேரியில் புயுல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு செய்தது புயல் பாதிப்பு குறித்து 2 குழுக்களாக பிரிந்து வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment