கன்னியாகுமரிக்கு மட்டும் எதிர்பார்த்த மழை கிடைக்கலை.. வெதர்மேன்

by Lifestyle Editor
0 comment

சென்னை: புரேவியால் தென் தமிழகம், உள் மாவட்டங்கள், வட தமிழகம், டெல்டா என அனைத்து பகுதிகளுக்கும் மழை கிடைத்த நிலையிலும் கன்னியாகுமரிக்கு மட்டும் மழை கிடைக்கவில்லை என்றும் அதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான புரேவி புயல் மன்னார் வளைகுடாவில் இருந்து நகர்ந்து கன்னியாகுமரி- பாம்பன் இடையே பாம்பன் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த புரேவி மன்னார் வளைகுடாவிலேயே புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

நெல்லை

எனினும் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கடலூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் என பரவலாக நல்ல மழையை கொடுத்தது. கன்னியாகுமரி- பாம்பன் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரிக்கு நல்ல மழையை கொடுக்கவில்லை.

கரையை தொடும்

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், கன்னியாகுமரிக்கு யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை, தென் மாவட்டங்களில் அந்த மாவட்டத்தில் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு கனமழை கிடைக்கவில்லை. இந்த புரேவி கன்னியாகுமரி நிலப்பரப்பை கடந்த 3-ஆம் தேதி இரவோ அல்லது 4- ஆம் தேதி அதிகாலையிலோ கரையை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.

கரையை தொடவில்லை

ஆனால் புரேவி புயலானது கடலிலேயே வலுவிழந்துவிட்டது. இதனால் கன்னியாகுமரி கரையை தொடவில்லை. சரி வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாவது கன்னியாகுமரி நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் இல்லை என்றாகிவிட்டது.

நெல்லை

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் நல்ல மழையை பெற்றது போல் கன்னியாகுமரி மாவட்டம் பெறவில்லை. நிவர் புயலின் போது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. ஆனால் இந்த முறை டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. புயலாகவோ அல்லது வலுவிழந்தோ கன்னியாகுமரி நிலப்பரப்பை தொட்டிருந்தால் அங்கு நல்ல மழை கிடைத்திருக்கும் என்றார்.

Related Posts

Leave a Comment