மரணம்! விருதுகளை வென்ற முக்கிய பட இயக்குனர் இறப்பு!

by Lifestyle Editor
0 comment

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் சின்மா கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கி வருகிறது. இதற்கிடையில் சினிமா வட்டாரத்தின் சிலர் காலமாகினர். இச்செய்தி கவலை அளித்தது. இந்நிலையில் சரத்குமாரை வைத்து சிம்ம ராசி படத்தை இயக்கிய ஈரோடு சௌந்தர் சிறுநீரக கோளாறால் காலமானார்.

15 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதிய இவர் தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது இவர் தான்.

முதல் சீதனம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டார். அவரின் பேரன் கபிலேஷை ஹீரோவாக்கி அய்யா உள்ளேன் அய்யா படத்தை இயக்கியிருந்தார்.

சொந்த ஊரான ஈரோடு நாதகவுண்டன் பாளையத்தில் மனைவி கலையரசி, மகள் காயத்திரி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக தொற்றுக்காக சிகிச்சைபெற்று வந்தவர் இன்று காலை காலமானார்.அவரின் இறுதி சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

அவரின் இறுதி சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Related Posts

Leave a Comment