Tenet திரைப்படத்தில் பணியாற்றிய வலிமை பட பிரபலம் ?

by Lifestyle Editor
0 comment

/இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை, இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் தமிழ் சினிமாவே இப்படத்தை பெரிய எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட தல அஜித் விலீங் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் உலக ரசிகர்கள் அனைவரிடமும் பிரபலமான இயக்குனர் கிறிஸ்டபர் நோலனின் Tenet திரைப்படத்தில் வலிமை பட கேமராமேனும் பணிபுரிந்துள்ளார்.

ஆம் அப்படத்தில் அவர் Additional Camera Operator- ஆக பணிபுரிந்துள்ளார், இதனை அறிந்த தல ரசிகர்கள் தற்போது இந்த தகவலை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment