வலிமை படத்தில் மிக முக்கிய நபர்! யார் அந்த பிரபலம் ?

by Lifestyle Editor
0 comment

வலிமை படத்தின் தற்போதைய நிலை என்ன என படக்குழு தகவல் வெளியிட்டால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என கண்ணீர் விடாத குறையாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

ஆனால் படக்குழு வழக்கம் போல மௌனமாக இருந்து வருவதோடு வேலைகளில் மிக கவனமாக இருந்து வருகிறது. கொரோனா ஊடரங்கு, படப்பிடிப்பு நிறுத்தம் ஆகியவற்றால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலைகள் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் அஜித்துக்கு அம்மாவாக தமிழ் சினிமாவின் மூத்த நடிகை சுமித்ரா நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே வீரம் படத்தில் தமன்னாவுக்கு அம்மாவாகவும், அஜித்திற்கு மாமியாராகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment