வீட்டில் இருக்கும் மங்கள பொருட்களில் முக்கியமானது குங்குமம். சுமங்கலிப் பெண்களின் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திலகமாக குங்குமம் இருக்கிறது. பெண் தெய்வங்களுக்கு உகந்த பிரசாதமாக இருப்பதால், தெய்வாம்சம் கொண்டது குங்குமம். எந்த தெய்வத்தை வணங்கினாலும், விபூதி, சந்தனம் மற்றும் பல பிரசாதங்கள் இருந்தாலும் குங்குமத்துக்கு என முக்கியமான இடம் உண்டு. அப்படியான குங்குமத்தை கையாளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்பது பெரியோர் வாக்கு.
நாம் எடுக்கும் பொழுது, குங்குமச் சிமிழ் அல்லது குங்கும டப்பா போன்றவை தவறுதலாக கீழே விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்படி கைதவறி நிகழ்ந்தால், அபகுனனம் என்பார்கள்.
குங்குமத்தை கையாளும்போது அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதற்காக அப்படிச் சொல்வார்கள். சில நேரங்களில் கைதவறி விழுவது தவிர்க்க முடியாது என்றாலும், அப்படி நிகழாமல் இருந்தால், நாம் ஒருமுகத்துடன் இருக்கிறோம் என்று அர்த்தமாகும். பதட்டாமாக இருப்பவர்கள் ஒருமுகமாக இருப்பதில்லை.
சண்டை சச்சரவுகள் வரும்!
குங்குமத்தை கையாளும் நேரத்தில்கூட பதட்டமாக இருப்பவர்களால், குடும்பத்தில் சச்சரவுகள் வரும். கணவன் – மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதனால்தான் மனதை எப்போதும் ஒருமுகமாக வைக்க வேண்டும் என்கின்றனர் பெரியோர்கள். வீட்டில் அமைதி நிலவ, சண்டை சச்சரவுகள் தவிர்க்க சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என பெரியவர்கள் வழிகாட்டி உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குங்குமம் கொட்டினால், சண்டை சச்சரவு, அபசகுணம் என்பதை தெரிந்துகொண்டு இனிமேலாவது கவனமாக கையாள வேண்டும். வீட்டில் அமைதியான சூழலை கொண்டு வர, குங்குமம் எடுக்கும்போது சிந்தாமல் எடுக்க மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என்பதை பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.