உடலின் எடையை அதிகரிக்க

by Web Team
0 comment

நொறுக்குத் தீனி கிடைத்தால் போதும் நேர காலமெல்லாம் பார்க்காமல், சிலர் செம வெட்டு வெட்ட ஆரம்பித்து விடுவார்கள். நாளடைவில் உடம்பு ஓவர் வெயிட் ஆன பிறகுதான் ‘அடடா… தப்பு பண்ணிட்டமே..’ என்று எச்சரிக்கையாகி மூச்சிரைக்க ஜிம்மில் ஓடிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் என்னதான் வெளுத்து வாங்கினாலும் உடம்பு ஏறவே ஏறாது.! அப்படிப்பட்டவர்களுக்கு அந்த உடல்வாகு அவ்வளவு வசதியாக இருக்கும். நின்றநிலையில அப்படியே தரையில் உட்கார்ந்து எழுந்திருக்க முடியும். மாடிப் படியேறினாலும் மூச்சு வாங்காது.தொப்பையும் இல்லாமல் ஜாலியா இருக்கலாம். ரொம்பவும் ஒல்லியாக இருந்தாலும்,இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டால் நல்லா இருக்குமே என்று நினைப்பார்கள்.அவர்களுக்கான செய்திதான் இது.

மரவள்ளி கிழங்கு கேள்விப்பட்டிருக்கீங்களா.!? அதுவா… வசதியில்லாத ஆட்கள் வாங்கி வேக வச்சு சாப்பிடுற ஐட்டமாச்சே.! என்றுதான் பலரும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.உண்மையில் அது உடலையும்,எலும்பையும் வலுவாக வைப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது என்பதுதான் உண்மை. இந்த கிழங்கிலுள்ள நார் சத்தானது செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடம்பில் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வைக்கிறது. தவிர,மரவள்ளி கிழங்கிலுள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் காரணமாக இருக்கிறது. வயதாகும் போது பொதுவாகவே மனிதர்களுடைய எலும்புகள் வலுவிழந்து நெகிழும் தன்மையோடு இருக்கும். சின்னதா அடிபட்டாலும் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்படுவதை நாமே பார்த்திருப்போம். அப்படி வராமல் பாதுகாக்க இதிலுள்ள விட்டமின் கே உபயோகமாக இருக்கும்.

இதெல்லாம் தெரிஞ்சுதான் சேட்டன்மார் அத்தனை பேர் வீட்டிலும், அன்றாட உணவுகளில் மரவள்ளிக் கிழங்கு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். முன்னாடியெல்லாம் மரவள்ளிக்கிழங்கை வேக வச்சு,மீன் பொரியல்,கார சட்னி என்று சாப்பிடுவார்கள். இப்போதெல்லாம் ‘கப்பை பிரியாணி’ என்று மரவள்ளி கிழங்கை வைத்து பிரியாணி செய்து கேரளாவிலுள்ள ஹோட்டல்களில் சூடாக கொடுக்கிறார்கள். அந்தப் பக்கம் போனால் ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்கள் ; டிவைன்.!

அப்படிப்பட்ட கிழங்கை நீங்களும் உங்களுக்கு பிடித்தமான வகையில் செய்து தினமும் ஒரு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால், நினைத்தது போல் தாராளமாக எடை போடலாம். முக்கியமான விசயம் ஒண்ணு சொல்லாமல் விட்டுட்டேனே… மரவள்ளி கிழங்கில் கார்ப்ஸ் அதிகமாகவே இருக்கும்.அதனால் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் ஏதேனும் ஒரு உணவுக்கு பதிலாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். சேட்டன்கள் உணவுக்கு நடுவே இதையும் எடுத்துக்கொள்கிறார்கள் என்றால்… தினமும் அவர்கள் நடக்கிற நடைக்கு நாம் ஈடு செய்யவே முடியாது. உடற்பயிற்சியோடு என்றால்,உங்கள் தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். என்ஜாய்…

Related Posts

Leave a Comment