கே.எஸ்.அழகிரி மருத்துவமனையில் அனுமதி!

by Lifestyle Editor
0 comment

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களை ஒப்பிடும் போது தற்போது கொரோனா பரவல் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், கொரோனா இரண்டாம் கட்ட அலையில் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது பாதிப்பு குறைந்து வரும் சூழலிலும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கு கொரோனா பரவி வருகிறது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானதால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,

Related Posts

Leave a Comment