எல்.முருகன் கோரிக்கை!

by Lifestyle Editor
0 comment

முருகனை இழிவுப் படுத்திய கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முருகனை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படவேண்டும் என்றும் நாளை நிறைவு பெற உள்ள வேல் யாத்திரை விழாவில் மத்திய பிரதேச மாநில முதல்வர் பங்கேற்கவிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். பாஜக சார்பில் கடந்த நவ.6ம் தேதி தொடங்கப்பட்ட வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. தடை விதித்தாலும் திட்டமிட்டப்படி வேல் யாத்திரை தொடரும் என எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதால் பாஜக பின்வாங்கியது.

இருப்பினும், முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததன் படி திருச்செந்தூரில் டிச.6ம் தேதி வேல்யாத்திரை நிறைவு விழா நடைபெறும் என பாஜக அறிவித்தது. நாளை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வேல் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க விருக்கும் நிலையில், அந்த பொதுக் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் அனுமதியை மீறி பொதுக்கூட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment